Anushka is playing the lead role in Gautham Menon.
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கும் ஒரு படத்தில் நடிகை அனுஷ்கா முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளார்.
கௌதம் மேனன் இயக்கிய ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடிகை அனுஷ்கா, நடித்துள்ளார். மீண்டும் அவரது இயக்கத்தில் அனுஷ்கா ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
‘பாகுபலி’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து நடிகை அனுஷ்கா, தற்போது ‘பாக்மதி’ என்ற படத்தில் நடிக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையில் நடிக்கும் இந்தப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது.
‘பாக்மதி’ படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.
‘பாக்மதி’ படத்தின் பர்ஸ்ட் லுக் அனுஷ்காவின் பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 7-ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது கொசுறு தகவல்.
இந்த நிலையில் அனுஷ்கா, அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த படம் கதாநாயகியை மைபடுத்திய கதை அம்சத்தை கொண்டது என்பதால் அனுஷ்காவுக்கு லீடு ரோல் கன்ஃபார்மாம்.
