anushka and prabas acting 5th movie

பாகுபலி திரைப்படத்திற்கு பின், பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஜோடி மிகவும் பிரபலமாகிவிட்டனர். பல ரசிகர்கள் இந்த ஜோடி உண்மையில் திருமணம் செய்துக்கொண்டாள் நன்றாக இருக்கும் என்று கூட தங்களுடைய கருத்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் பிரபாஸ் அடுத்ததாக நடிக்க உள்ள 'சாஹோ ' படத்தில், கதாநாயகியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனே, ஷ்ரத்தா கபூர் ஆகியோரோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. ஆனால் அவர்களுக்கு கால்ஷீட் இல்லை என கூறப்படுகிறது.

இதனால் இந்த திரைப்படத்திலும் அனுஷ்காவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, தமன்னா இந்த திரைப்படத்தில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் யு.வி.வி நிறுவனம் மறுப்பு தெரிவித்தது . ஆனால் தற்போது அனுஷ்கா இந்த திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக வெளிவந்த தகவலுக்கு மௌனம் சாதித்து வருகின்றனர் படக்குழுவினர்.

இந்த படத்தில் அனுஷ்காவும் பரபாஸும் இணைந்து நடித்தால், இது அவர்களுடைய ஐந்தாவது படமாக இருக்கும்.