நடிகை அனுஷ்கா நடிப்பில் வெளியாக இருந்த மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படம் சில காரணங்களால் அறிவித்த தேதியில் வெளியாகவில்லை என, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது. 

நடிகை அனுஷ்கா 'சைஸ் ஸீரோ' படத்திற்கு பின்னர், உடல் எடை கூடியதால் அடுத்தடுத்து தான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டார். மேலும் 40 வயதை இவர் கடந்துவிட்ட நிலையில் இவருக்கு தீவிரமாக பெற்றோர் மாப்பிள்ளை பார்த்த நிலையில், ஜாதகத்தில் உள்ள பிரச்சனை காரணமாக தற்போது வரை, அனுஷ்காவுக்கு திருமணம் நடைபெறாமல் உள்ளது. 

பெற்றோருக்காக கடந்த மூன்று ஆண்டுகளாக திரையுலகில் இருந்து விலகி, கோவில்களில் பல பூஜைகள் செய்தும், இவரின் மனதுக்கு பிடித்தது போல் மாப்பிள்ளை அமையாததால், மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் திரைப்படம் நடிக்க துவங்கியுள்ளார். அதன் படி, கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான சைலன்ஸ் படத்தை தொடர்ந்து அனுஷ்கா நடித்து முடித்துள்ள திரைப்படம்... 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' இந்த படத்திற்காக உடல் எடையை வெகுவாக குறைத்து நடித்துள்ளார்.

'தல' தோனியின் முதல் படம் டக் அவுட்டா.. பிக்கப்பா..? 'LGM' முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் விவரம்!

இந்த படத்தை, இயக்குனர் மகேஷ் பாபு இயக்க ஸ்டுடியோ கிரீன்ஸ் நிறுவனம் மற்றும் யூ வி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இந்த படம், ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது ஸ்டுடியோ கிரீன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகவும், விரைவில் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது.

ஏம்மா இப்போ இது ரொம்ப அவசியம்மா? கை - கால் செயலிழந்த குணசேகரனை காண்டாக்கிய நந்தினி!

மேலும் படத்தை அறிவித்த தேதியில் வெளியிடாத காரணத்திற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் கூறி உள்ளது. நீண்ட இடைவேளைக்கு பின்னர் அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் திரைப்படம் இவரின் திரைப்பட வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுறையை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Scroll to load tweet…