சபரிமலை சுவாமி ஐய்யப்பன் மகிமையை சொல்லும் பத்தி படங்கள் தமிழ், மலையாளத்தில், ஏற்கனவே நிறைய வந்துள்ளன. அந்த வகையில் தற்போது நடிகை அனுஷ்கா ஐயப்ப சாமி பக்தையாக நடிக்கும் ஒரு படம் உருவாக உள்ளது. 

பக்தர்கள் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடும் காலத்தில் இது போன்ற படங்களை வெளியிடுவது வழக்கம். முன்னணி நடிகர்கள் பலர் ஐயப்பன் பத்தி படங்களில் நடித்து இருக்கிறார்கள். அனைத்தும் சிறிய பட்ஜெட் படங்களாகவே தயாராகி திரைக்கு வந்தன. 

தற்போது முதல் முறையாக அதிக பட்ஜெட்டில் ஐயப்பன் மகிமையை சொல்லும் புதிய பக்தி படம் தயாராகிறது. இந்த படத்தை சந்தோஷ் சிவன் இயக்கி,  ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 'கோகுலம் கோபாலன் தயாரிக்கிறார். தமிழ் , தெலுங்கு, மலையாளம் , இந்தி ஆகிய நான்கு மொழிகளில் இந்த படம் தயாராகிறது.

பல மொழிகளில் இருந்து முன்னணி நடிகர் - நடிகைகளை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. அனுஷ்கா, முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏற்கனவே அனுஷ்கா  'ஓம் நமோ வெங்கடேசாயா' என்ற திருப்பதி வெங்கடாஜலபதி மிகிமையை சொல்லும் பக்தி படத்தில் நடித்து இருக்கிறார். 

அருந்ததி, பாகுபலி, பாக்மதி உள்ளிட்ட பல படங்கள் அவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். சபரிமலை அய்யப்பன் படத்திலும் அழுத்தமான வேடத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஆகஸ்டு மாதம் தொடங்குகிறது என தகவல் தற்போது வெளியாகியுள்ளது.