இந்தி திரையுலகில் பிளாக் ஃபிரைடே, தேவ் டி, தி லன்ச் பாக்ஸ் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியவர் இயக்குநர் அனுராக் காஷ்யப். இவர் மீது பாலிவுட்டின் இளம் நடிகையான பாயல் கோஷ் பரபரப்பு பாலியல் புகார் ஒன்றை கூறினார். ​
பட வாய்ப்பிற்காக தொடர்பு கொண்ட தன்னை அனுராக் வீட்டிற்கு வரச்சொல்லி முகவரி கொடுத்ததாகவும், ஒரு நடிகை என்ற அடையாளத்துடன் வர வேண்டாம் என்று கூறியதால் சல்வார் கமீஸ் அணிந்து சென்றதாகவும் தெரிவித்துள்ளார். முதல் நாள் நல்லபடியாக பேசிய அனுராக் எனக்கு சாப்பாடு கொடுத்து உபசரித்தார். 

 

இதையும் படிங்க: வாவ்... செம்ம க்யூட்... ஃபேஸ் ஆப் மூலம் சிறுவர், சிறுமிகளாக மாறிய திரைப்பிரபலங்கள்...!

மீண்டும் ஒரு முறை வீட்டிற்கு வரும் படி அழைத்தார். மது அருந்திக் கொண்டிருந்ததுடன், புகைப்பிடித்தார். அது சிகரெட் இல்லை, ஏதோ கெட்ட வாடை வந்தது. அவர் என்னிடம் பேசிக் கொண்டே அடுத்த அறைக்கு அழைத்துச் சென்றார். புத்தகங்கள், பழைய வீடியோ கேசட்டுகள் இருந்த அந்த அறையின் சோபாவில் என்னை தள்ளி என்னுடன் வலுக்கட்டாயமாக உறவு கொள்ள முயன்றார். நான் என்னை விட்டு விடும் படி கெஞ்சினேன். அவரும் அடுத்தமுறை வரும் போது மனதளவில் தயராக வா என சொல்லி அனுப்பினார் எனக்கூறியது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதுகுறித்து மும்பை போலீசாரிடமும் பாயல் புகார் அளித்தார். ஆனால் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆளுநரை சந்தித்து முறையிட்டார். அனுராக் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என அறிவித்தார். இதையடுத்து அனுராக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டது. வெர்சோவா போலீஸ் நிலையத்தில் நேற்று ஆஜரான அவரிடம் பெண் போலீஸ் அடங்கிய குழு விசாரணை நடத்தியது. அவரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

 

இதையும் படிங்க:  பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது?... நிறைமாத வயிறுடன் நடத்திய அசத்தல் போட்டோ ஷூட்...!

விசாரணையின் போது அனுராக் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் பாயலின் புகார் குறித்து அவருடைய வழக்கறிஞர் பிரியங்கா கூறியுள்ளதாவது, பாலியல் வன்கொடுமை நடந்ததாக கூறப்படும் ஆகஸ்ட் 2013 அண்டு அனுராக் இந்தியாவிலேயே இல்லை. படப்பிடிப்பிற்காக இலங்கை சென்றிருந்தார். அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.