அதர்வா நடித்த பூமராங்’ படத்தை இயக்கிய ஆர்.கண்ணன் அப்படத்தைத் தொடர்ந்து சந்தானத்தை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார்.அந்தப்படத்தில் சந்தானத்தின் அப்பாவாக நடிக்க கவுண்டமணியை அணுகினார். கவுண்டமணி நடிக்க சம்மதிக்கவில்லை.இதற்கிடையில் சந்தானம் நடித்த சில படங்கள் பிசினஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கின்றன. இதன்காரணமாகவோ என்னவோ சந்தானத்தை வைத்து இயக்கவிருந்த அந்தப்படத்தை தள்ளிவைத்துவிட்டு அதர்வா நடிக்கும் படத்தை இயக்குகிறார் ஆர்.கண்ணன்.

இயக்குனர் கண்ணனும், அதர்வும் மீண்டும் இணைகிற இந்தப் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.கொடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த அனுபமா பரமேஸ்வரனுக்கு தொடர்ந்து பட வாய்ப்பு கிடைக்கவில்லை.எனவே இனி நடிப்பு வேண்டாம் என்று நினைத்து ஒரு மலையாளப்படத்தில் உதவி இயக்குநராக பணி செய்ய ஆரம்பித்தார்.

 துல்கர் சல்மானின் முதல் சொந்தத் தயாரிப்பான பெயரிடப்படாத படத்தில் கதாநாயகியாக நடித்துக்கொண்டே உதவி இயக்குநர் வேலையும் பார்க்கும் செய்தியை அப்போது  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு உற்சாகமான தொனியில் பகிர்ந்த  அனுபமா. அதில்,...துல்கரின் முதல் தயாரிப்பான இப்படத்தில் ஷம்சு சாய்பா இயக்கத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிவதை பெருமையுடன் பகிர்ந்துகொள்கிறேன். இந்த படக்குழுவை மிகவும் நேசிக்கிறேன். ஒரு படத்தின் வளர்ச்சியை ஒவ்வொரு அங்குலமாக கூட இருந்து தரிசிப்பது புது அனுபவமாக இருக்கிறது. அடுத்தடுத்த தகவல்களுக்காக காத்திருக்கிறேன் என்று பதிவு செய்திருந்தார்.

அந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவரும்நிலையில் அவரே எதிர்பாராதவிதமாக அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.எனவே உதவி இயக்குநர் வேலையிலிருந்து விலகி, இம்மாதம் 15-ஆம் தேதி துவங்க இருக்கும் அதர்வா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன்.