கடந்த ஆண்டு, வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமான 'ராட்சசன்'  படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. இந்த படத்தில் அமலாபால் நடித்த வேடத்தில், தற்போது நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான, முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமார், இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் விஷ்ணு விஷால் வைத்து, கடந்த வருடம் 'ராட்சசன்' படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றதோடு, சிறந்த விமர்சனங்களை பெற்று வசூல் சாதனை செய்தது.

இந்த படத்தை தற்போது தெலுங்கில் 'ரைடு' என்ற பெயரில், இயக்குனர் ரமேஷ்வர்மா ரீமேக் செய்கிறார். இதில் பெல்லம் கொண்ட ஸ்ரீனிவாஸ் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்த ஆசிரியை வேடத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.