சிறுவர்கள் மீதான தாக்குதல்.. பாடகர் மனோ மகன்களுக்கு அளிக்கப்பட்ட முன்ஜாமீன் - முழு விவரம்!
Singer Mano Sons : பிரபல பாடகர் மனோவின் இரண்டு மகன்கள், சிறுவர்கள் சிலரை தாக்கியதாக அவர்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அந்த விவகாரம் பெரிய அளவில் வெடித்தது.
தமிழ் சினிமாவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக மிகச் சிறந்த பாடகராக வலம் வந்து கொண்டிருப்பவர் மனோ. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 35,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி, இன்றளவும் டாப் பாடகராக வலம் வந்து கொண்டிருப்பவர் அவர். 1986ம் ஆண்டு இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளியான "பூவிழி வாசலிலே" என்கின்ற திரைப்படத்தில் ஒழித்த "அண்ணே அண்ணே" என்கின்ற பாடல் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கியவர் அவர்.
இளையராஜா இசையில் மட்டும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி இருக்கிறார், 3000 மேற்பட்ட மேடைகளில் தனது இசை கச்சேரியை நடத்தி இருக்கிறார் மனோ. அது மட்டுமல்லாமல் நடிகராகவும், டப்பிங் கலைஞராகவும் பல மொழிகளில் கலக்கியவர் மனோ. இன்னும் சொல்லப்போனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கன்னட மொழியில் பல படங்களில் டப்பிங் பேசியது இவர் தான்.
கமலை அடுத்து மெகா ஹிட் கோலிவுட் நடிகருடன் இணையும் STR? இயக்குனர் யார் தெரியுமா?
இவ்வளவு பெரிய புகழுக்கு சொந்தக்காரரான மனோவின் இரண்டு மகன்கள் தான் ஜாகீர் மற்றும் ரபீக். சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியான ஒரு சிசிடிவி வீடியோ மிகப் பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதில் மனோவின் இரண்டு மகன்கள் சிலரை தாக்குவது போன்ற காட்சிகள் அமையப்பெற்று இருந்தது.
இதனை அடுத்து உணவகம் ஒன்றுக்கு சாப்பிட சென்ற மனோவின் மகன்களிடம், சிலர் வம்பு செய்ததாகவும். அப்போது அங்கிருந்த சிறுவர்கள் சிலரை ஜாகிர் மற்றும் ரபீக் கடுமையாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியதாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு இந்த விஷயத்தில் மௌனம் கலைந்த மனோவின் மனைவி பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்.
தனது மகன்கள் தான் முதலில் தாக்கப்பட்டதாகவும், அதற்கு தற்காத்துக் கொள்ளும் விதத்தில் தான் அவர்கள் மீண்டும் தாக்கியதாகவும் ஒரு விளக்கத்தை கூறியிருந்தார் அவர். இருப்பினும் தன்னுடைய இரண்டு மகன்களும் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள் என்று தனக்கு தெரியவில்லை என்றும், தனக்கு மிகவும் பயமாக இருப்பதாகவும் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியிருந்தார்.
இந்த சூழலில் இரு தரப்பினர்களுக்கும் இடையே ஏற்பட்ட முதலில் மனோவின் மகன்கள் இருவரும் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும். மேலும் அவர்களுக்கு இப்பொழுது முன்ஜாமின் வழங்கப்பட்டு, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் தொடர்ந்து 30 நாட்களுக்கு அவர்கள் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
"அம்மா இயற்கை எய்தினார்".. பிரபல நடிகையின் மறைவு - வீடியோ வெளியிட்டு வருந்திய கமல்ஹாசன்!