Asianet News TamilAsianet News Tamil

நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது..! ரஜினிகாந்த் குறித்து சர்ச்சை கேள்வி கேட்ட கஸ்தூரிக்கு கிடைத்த பதில்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மட்டும் அமெரிக்க செல்ல எப்படி அனுமதி கிடைத்தது என்று, சந்தேக தொனியில் கேள்வி எழுப்பி இருந்த கஸ்தூரிக்கு தற்போது அதற்கான விடை கிடைத்து விட்டதாக அவரே ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.
 

Answer to got Kasturi  controversial question about Rajinikanth
Author
Chennai, First Published Jun 29, 2021, 4:59 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மட்டும் அமெரிக்க செல்ல எப்படி அனுமதி கிடைத்தது என்று, சந்தேக தொனியில் கேள்வி எழுப்பி இருந்த கஸ்தூரிக்கு தற்போது அதற்கான விடை கிடைத்து விட்டதாக அவரே ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தொற்று, அதிகரித்து கொண்டே சென்றதால், இந்தியாவில் இருந்து அமெரிக்கா, உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு வர அந்நாடுகள்... கடந்த மே மாதம் முதலே தடை விதித்தது.  இதனால் அமெரிக்காவிற்கு செல்ல இருந்த பலரால் இங்கிருந்து செல்லமுடியவில்லை. இந்த நிலையில் ரஜினிக்கு மட்டும் எப்படி அமெரிக்கா செல்ல அனுமதி கிடைத்தது...  என நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி ஒன்றை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்.

Answer to got Kasturi  controversial question about Rajinikanth

மேலும் ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகியதற்கும், அமெரிக்கா சென்றதற்கு கூட முடிச்சி போட்டு சில சந்தேக கேள்விகளை எழுப்பி இருந்தார். அதே நேரத்தில் இதுபோன்ற சந்தேகங்களுக்கு ரஜினிகாந்த் தரப்பில் இருந்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும்,  மத்திய அரசிடமிருந்து மருத்துவ விலக்கு பெற்று அமெரிக்கா செல்லும் அளவுக்கு அவரது உடலுக்கு அப்படி என்ன நேர்ந்தது என்றும், இந்தியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாத அளவுக்கு அவரது உடலில் என்ன பிரச்சனை என்ற கேள்வியையும் நடிகை கஸ்தூரி முன்வைத்தார்.

Answer to got Kasturi  controversial question about Rajinikanth

இவரது கேள்வி ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் மட்டும் இன்றி, அனைத்து தரப்பினர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இவர் முன் வைத்த இதுபோன்ற கேள்விகளுக்கு ரஜினிகாந்த் தரப்பில் இருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கொடுக்கப்பட்டதாக அவரே தற்போது ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கஸ்தூரி போட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது.... "அலைபேசியில் அழைத்து விவரத்தை விளக்கினார்கள். 
ஆச்சரியம் கலந்த நன்றி  !
நாரதர் கலகம்  நன்மையில் முடிந்தது. 
 என் உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது. 
நல்ல செய்தி-  நானே முதலில் சொல்கிறேன்.
பூரண நலமுடன் புது பொலிவுடன் 
 'தலைவரை' வரவேற்க தயாராகட்டும் தமிழகம் ! " என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios