தமிழ் திரையுலகில் அதிகப்படியான, மல்டி காஸ்டிங் படங்கள் வருவதில்லை என்றாலும், ஹாலிவுட் திரையுலகில் அது சர்வ சாதாரணமாகிவிட்டது.

அந்த வகையில் தென்னிந்திய பிரபலன்களான, நடிகர் மாதவன், அஞ்சலி, அனுஷ்கா,  மற்றும் ஷாலினி பாண்டே நடிப்பில் புதிய படம் உருவாக உள்ளது.  இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார். ஹேமந்த் மதுர்கர் இயக்க உள்ளார்.  இந்த படம் ஒரு திரில்லர் படமாக உருவாக உள்ளது.

'இரண்டு' படத்தை தொடர்ந்து  13 ஆண்டுகளுக்கு பின்  மாதவன் மற்றும் அனுஷ்கா ஆகியோர் ஜோடி இந்த படத்தின் மூலம் ஜோடி சேர உள்ளனர்.

இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்த பிறகு தான் அனுஷ்கா நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களைத் தொடர்ந்து ஒரு சில முக்கிய ஹாலிவுட் நடிகர்களும் இந்த படத்தில் நடிக்க உள்ளனர்.  இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் அமெரிக்காவில் ஆரம்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.