இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் வேலை பார்த்து வந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா லாக்டவுன் காரணமாக பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த 14ம் தேதி முதல் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா ஆகியோர் தனி விமானத்தில் ஐதராபாத் புறப்பட்டுச் சென்றனர். தற்போது ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் ஷூட்டிங்கில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சூப்பர் ஸ்டாருடன் அவருடைய மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் உடன் சென்றுள்ளார்.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் அதீத கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. ஆம்... கொரோனா பரவல் காரணமாக நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் உட்பட ஒட்டுமொத்த அண்ணாத்த படக்குழு மொத்தமும் பயோ பபுளுக்குள் இருந்து வந்தனர். அந்த பயோ பபுளில் உள்ளவர்கள் தவிர, மற்றவர்களுக்கு அந்த ஓட்டல், படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது. அதேபோல் பயோபபுளில் இருப்பவர்கள் யாரும் வெளியேபோய்விட்டு மீண்டும் உள்ளே நுழையவும் முடியாது என உச்சகட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் வேலை பார்த்து வந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நடிகர், நடிகைகள் உள்ளிட்டோரை சொந்த ஊருக்கு அனுப்ப உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்ணாத்த ஷூட்டிங் ஸ்பாட்டில் 7 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 23, 2020, 2:46 PM IST