'தர்பார்' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ''அண்ணாத்த''. இதில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
'தர்பார்' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ''அண்ணாத்த''. இதில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் முதல் இரண்டு கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த நிலையில், உலகம் முழுவதையும் உச்சகட்ட அச்சத்தில் வைத்துள்ள கொரோனா பீதியால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் முதலே படப்பிடிப்பிற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் திரைப்பட ஷூட்டிங்கிற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. எனினும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷூட்டிங்கில் பங்கேற்க வேண்டாம் என ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் ஜனவரியில் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டு, சட்டமன்ற தேர்தலிலும் பங்கேற்க திட்டமிட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் அண்ணாத்த படத்தின் 40 சதவீத படப்பிடிப்பு வேலைகள் முடிக்க வேண்டியுள்ளன. எனவே வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "அண்ணாத்த" படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக சென்னை டூ ஐதராபாத் தனி விமானத்தில் பறக்க திட்டமிட்டுள்ளாராம் ரஜினிகாந்த். படப்பிடிப்பு தளத்தைப் பொறுத்தவரை கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் படக்குழுவினர் மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் உச்சகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் 40 நாட்களுக்கு ரஜினி ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளதாகவும், இடையில் ஓய்வெடுப்பதற்காக சென்னை வந்து திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக, 'அண்ணாத்த' படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா, பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தலைவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பின், டிசம்பர் 15 ஆம் தேதி முதல் மீண்டும் படப்பிடிப்பு துவங்க உள்ளதை அறிவித்துள்ளார்.
அந்த வீடியோ இதோ...
#Annaatthe shooting resumes from Dec 15th!@rajinikanth @directorsiva #HBDSuperstarAnnaatthe#HBDSuperstarRajinikanth pic.twitter.com/GhfP9FV71W
— Sun Pictures (@sunpictures) December 12, 2020
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 12, 2020, 11:40 AM IST