Annarathirai trailer is released...

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாதுரை படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.

இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராக உருமாறி தற்போது அனைத்து ரக ரசிகர்களையும் தனக்கு ரசிகர்களாக கொண்டு வெற்றிகரமாக வலம் வருபவர் விஜய் ஆண்டனி.

இவரது படங்கள் தோல்வியே கண்டிராத அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று விடுகின்றன.

இவர், “எமன்” படத்திற்கு பிறகு, தற்போது :அண்ணாதுரை” என்றப் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை சீனிவாசன் இயக்குகிறார்.

இந்தப் படத்தில் டயானா, ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. “நேரா போய் ரைட் எடுத்தா ஒரு தோல்வி வரும்” என்று ஆரம்பிக்கும் இந்த டிரைலரைப் பார்க்கும் அனைவருக்கும் இந்த டிரைலர் நிச்சயம் பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, மெகா ஸ்டார் சிரஞ்சீவி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.