நடிகை அஞ்சலியும், ஜெய்யும் 'எங்கேயும் எப்போதும்' படத்தில் இணைந்து நடித்ததில் இருந்தே இருவரும் காதலித்து வந்ததாக கோலிவுட்டில், கிசுகிசுக்கப்பட்டு வந்தது. 

பின் இருவரும் மீண்டும் 'பலூன்' திரைப்படத்தில் நடிக்க துவங்கியதில் இருந்து, இவர்களை பற்றிய காதல் கிசுகிசுக்கள் அதிகரித்துவிட்டது. அதற்கு ஏற்றாப்போல்  ஜெய், அஞ்சலிக்கு தோசை சுட்டுக் கொடுத்த படம் வெளியானது. 

மேலும் அஞ்சலியும் ஜெய்யின் பிறந்த நாள் விழாவில் கலந்துக்கொண்டு கேக் பறந்து வருவதுபோல் வித்தியாசமாக ஜெய்யின் பிறந்தநாளை கொண்டாடி அசத்தினார். 

அதே போல் சமீபத்தில் ஜெய் கொடுத்த ஒரு பேட்டியில் ‘நானும் அஞ்சலியும் திருமணம் செய்து கொள்ளலாம்’ என்பது போல கூறியதாக கூறப்பட்டது. 

இந்நிலையில் தனக்கும் ஜெயிக்கும் காதலே இல்லை என்பது போல் கூறியுள்ளார் அஞ்சலி.  இதுகுறித்து அவர் பேசுகையில்... தற்போது 'நிறையப்படங்களில் கமிட்டாகி நடித்து வருவதால், காதல் கல்யாணம் என எதனை பற்றியும்  நினைக்க எனக்கு நேரம் இல்லை. 

மேலும் நான் "இதுவரை மனதுக்கு பிடித்தவரை  பார்க்கவில்லை. அப்படி ஒருவரை தான் தற்போதுவரை தேடிக்கொண்டு இருக்கிறேன். நாளையே அது போல ஒருவர் என் பார்வையில் பட்டால் நிச்சயம் அவரிடம் அதை கூறுவேன்" என கூறியுள்ளார். 

மேலும் நான் அரசியலுக்கு வரபோவதாக ஒரு சில செய்திகள் வெளியாகியது, ஆனால் இதில் எந்த உண்மையும் இல்லை. டெல்லி சென்றபோது பாராளுமன்றத்தை சுற்றி பார்க்க சென்றேன் இதனை யாரோ பார்த்துவிட்டு நான் அரசியலுக்கு வரபோவதாக செய்தி திரித்துவிட்டனர், அரசியலுக்கு வரும் எண்ணம் தனக்கு துளியும் இல்லை என்று அஞ்சலி மேலும் தெரிவித்தார்.

அஞ்சலி மற்றும் ஜெய்யின் காதலை பல ரசிகர்கள் ஆதரித்து வந்த நிலையில், தற்போது அஞ்சலி இதுபோன்ற ஒரு பேட்டியை கொடுத்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.