அனிதா விஜயகுமாரின் மகள் தியாவுக்கு வரும் 19-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

நடிகர் விஜயகுமாருக்கு 2 மனைவிகள். முதல் மனைவியான முத்துக்கண்ணுவிற்கு பிறந்த பிள்ளைகள் கவிதா விஜயகுமார், அனிதா விஜயகுமார், அருண் விஜய். இவர்களில் கவிதா விஜயகுமார், சர்தகுமாரின் கூலி படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்திருப்பார். அருண் விஜய்யும் பல படங்களில் ஹீரோவாக நடித்த நிலையில், தற்போது வில்லன் கேரக்டரிலும் மிரட்டி வருகிறார்.

விஜயகுமார் சக நடிகையான மஞ்சுளாவை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு பிறந்தவர்கள் வனிதா விஜயகுமார், ப்ரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி ஆகியோர். இவர்கள் மூவரும் படங்களில் நடித்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்தது தான். இதில் வனிதா மட்டும் குடும்ப தகராறு காரணமாக தனியாக வாழ்ந்து வருகிறார். அவரை தவிர மற்ற 5 பிள்ளைகளும் ஒற்றுமை உடன் வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் விஜயகுமார் குடும்பத்தில் திரையில் நடிக்காத ஒரே மகள் என்றால் அது அனிதா விஜயகுமார் தான். 1973-ம் ஆண்டு பிறந்த அனிதா விஜயகுமார் ஒரு மருத்துவர் ஆவார். கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்ட அனிதா கத்தார் நாட்டில் செட்டில் ஆனார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். 

அனிதாவின் மகள் தியாவும் மருத்துவராக இருக்கிறார். இவருக்கு திலன் என்பவருக்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் ஆனது. இதுதொடர்பான புகைப்படங்கள் அப்போது வைரலானது. இந்த நிலையில் தியா - திலன் ஜோடிக்கு வரும் 19-ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற உள்ளது. 

இந்த திருமணத்திற்காக கடந்த மாதமே இந்தியா வந்த அனிதா விஜயகுமார் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். தனது தந்தை விஜயகுமார், சகோதரி கவிதா ஆகியோருடன் அனிதா பல பிரபலங்களுக்கு அழைப்பிதழ்களை வழங்கி வருகிறார்.

அந்த வகையில் ரஜினி, சூர்யா, தனுஷ் ஆகியோரின் குடும்பங்களுக்கு அனிதா நேரில் சென்று அழைப்பு விடுத்தார். இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியானது. மேலும் மகளின் திருமணத்திற்காக தனது வீட்டையே மலர்களால் அலங்கரித்த வீடியோவையும் வெளியிட்டிருந்தார். 

இந்த நிலையில் நேற்று அனிதா விஜயகுமார் வீட்டில் பந்தகால் நடும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. இதில் விஜயகுமார், கவிதா விஜயகுமார் அருண் விஜய், ப்ரீத்தா என ஒட்டுமொத்த குடும்பத்தினரும் பங்கேற்றனர். இந்த வீடியோ தனது இன்ஸ்கிராம் பக்கத்தில் மணப்பெண்ணான தியா பதிவிட்டுள்ளார்.

View post on Instagram

மேலும் அவரின் பதிவில் “ அனைவரின் அன்புடனும் எங்கள் பந்தக்கால் மற்றும் சுமங்கலி பூஜை நிகழ்ச்சி உடன் திருமண கொண்டாட்டங்கள் தொடங்கியது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

View post on Instagram

முன்னதாக தனக்கு மெஹந்தி போடும் வீடியோ, மேக்கப் போடும் வீடியோ, புடவை கட்டும் வீடியோவையும் தியா பகிர்ந்திருந்தார். இந்த வீடியோக்கள் வைராகி வரும் பலரும் தியாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

View post on Instagram