நேற்று துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களின் ஒருவராக, பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்திருப்பவர் பிரபல செய்தி வாசிப்பாளரும் , தொகுப்பாளருமான அனிதா சம்பத். இவர் 'எந்திரன்' உள்ளிட்ட சில முன்னணி நடிகர்கள் படங்களில் கூட செய்திவாசிப்பாளராகவே தோன்றியுள்ளார்.

இவருடைய அழகிற்கும், திறமைக்கும் பல ரசிகர்கள் உள்ளனர். பார்க்க செம்ம ஸ்டைலிஷ் பெண்ணாக இருந்தாலும் தமிழை அழுத்தம் திருத்தமாக படிக்க கூடியவர்.

இந்நிலையில் இவர், பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக, திருமணம் செய்து கொண்டபின் பலர் செய்த அட்வைஸ் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் தன்னுடைய கணவரை கட்டி பிடித்தபடி புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

இதில் அவர் கூறியுள்ளதாவது, திருமணம் ஆனா உன்ன யாரும் கண்டுக்க மாட்டாங்க..எல்லாரும் unfollow பண்ணிடுவாங்க..field out ஆயிடுவ இதுதான் நான் அதிகமா கேட்ட அட்வைஸ்..அப்படியே ஆனாலும் பரவாலனு தான் கல்யாணம் பண்ணேன்..

ஆனா திருமணம் எங்கயும் என்றைக்கும் ஒரு தடையா இருக்கவே இல்ல..குறிப்பா திருமணத்துக்கு பிறகு தான் எனக்கு வாய்ப்புகளும் அதிகமா வந்துச்சு..எல்லாத்துக்கும் மேல உங்க கிட்ட இருந்தும் நிறைய அன்பு கிடைச்சிது..

பிரபாவ சந்திச்ச நாள்ல இருந்தே கொஞ்சம் கொஞ்சமா professionல வளர்ச்சிய மட்டும் தான் பாத்துக்குட்டு வரேன்..இனிமேலும் தொடரணும்னு வேண்டிக்கிறேன்..


.
Cute ஆன "DREAM GIRL" ah இருக்குறத விட..நல்லத சொல்ற
"DREAM அக்கா"வாவோ
"DREAM தங்கை"யாவோ இருப்பதையே விரும்புறேன்..!!
.
திருமணம் எந்த பெண்ணுக்கும் தடை அல்ல..அது இனிப்பதும் கசப்பதும் புரிந்து வாழ்வதை பொறுத்தது!!

View this post on Instagram

கேமரா பதிவா? கண்ணாடி பிம்பமா? எதில் நான் நிஜம்? . கேமராவில் பதியாத சலனத்துக்கும்; கண்ணாடியில் நிலைக்காத பிம்பத்துக்கும்; இடையில் இருக்கிறேன் நிஜமான நான் . படித்ததில் பிடித்தது -கவிஞர் சுகுமாரன்.. Shooting in lockdown; Sunday star special . #anitha #anithasampath #suntv #sunnews #newsreader #suntvnewsreader #vanakkamthamizha #vanakamthamizha #anchor #vj #anithaanchor #newsreaderanitha #newsreaderanithasampath #anithasampathinstagram

A post shared by Anitha Sampath (@official_anithasampath) on Apr 29, 2020 at 6:07am PDT