இயக்குனர் சினிஷ் ரியல் காதல் ஜோடிகள் என்று கூறப்படும் ஜெய் மற்றும் அஞ்சலி நடிப்பில் உருவாகி வரும் 'பலூன்' என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

 இந்த படத்திற்கு மேலும் பலம் சேர்ப்பது போல்  யுவன் ஷங்கர் ராஜா இசையில்  இசையமைப்பாளர் அனிருத் ஒரு சுவாரஸ்யமான பாடலை பாடியுள்ளார். யுவன்-அனிருத் கூட்டணி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெரும் என்றும் எதிரிபார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படக்குழு ஓவியா ரசிகர்களுக்காக நீங்க 'ஷட்- அப் பண்ணுங்க' என்கிற பாடலை ஓவியாவுக்கு சமர்ப்பணம் செய்ய உள்ளதாக ஏற்கனவே கூறியுள்ள நிலையில், இந்த பாடலை தான் அனிருத் யுவன் இசையில் பாடியுள்ளாராம்.

பலூன் படத்தில் வரும் இந்த பாடல் ஓவியா ரசிகர்களுக்கு மற்றும் இன்றி அனைவருக்கும் பிடிக்கும் என இந்தப்படத்தின் இயக்குனர் சிரிஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் 'இப்பாடலின் ப்ரோமோ வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியிட உள்ளதாகவும். இப்படத்தின் மற்றொரு பாடலான 'மழை மேகம் நீயாட' யுவனின் v பிறந்தநாளான வரும் 31 ஆம் தேதி அன்று வெளியிடவுள்ளோம்'' என கூறியுள்ளார்.