அனிருத் பெண்வேடம் போட்டு இருப்பது போல் நேற்றைய தினம் ஒரு புகைப்படம் வெளியானது. இதை வைத்து ஒரு சில ஊடகங்கள்  இது நயன்தாரா நடித்து வரும் 'கோலமாவு கோகிலா' படத்தில் அனிருத் பெண் வேடம் போட்டு நடித்துக்கொண்டிருக்கும் புகைப்படம் என செய்திகள் வெளியிட்டது.

இந்த செய்திக்கு அனிருத் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் பிரபல மாடல் ஒருவரின் புகைப்படம் என்றும், இந்த புகைப்படத்தில் இருப்பது அனிருத் இல்லை என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மாடல் அழகியின் முழு உருவத்தின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

எனினும் 'கோலமாவு கோகிலா' படத்தில் அனிருத் நடிப்பது உண்மை தான் என்றாலும், அந்த படத்தில் அனிருத் என்ன கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பதை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர். 

இந்த படத்தில் நடிப்பது மட்டும் இன்றி, இசையமைத்தும் வருகிறார் அனிருத். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் திலீப்குமார் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.