Suriya New movie : சூர்யா படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல இசையமைப்பாளர்! வாய்ப்பை தட்டித்தூக்கிய அனிருத்
Suriya New movie : கார்த்தியின் சிறுத்தை, அஜித்தின் வீரம், விவேகம், விஸ்வாசம், வேதாளம் போன்ற படங்களை இயக்கிய சிவா உடன் கூட்டணி அமைக்க உள்ளார் சூர்யா.
பாலா படத்தில் சூர்யா
நடிகர் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது. இதையடுத்து பாலா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதுதவிர வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தையும் கைவசம் வைத்துள்ளார்.
வேகமெடுக்கும் வாடிவாசல் பணிகள்
ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இப்படம் தயாராக உள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ள இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இப்படத்தின் டெஸ்ட் ஷூட் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னை ECR-ல் பிரம்மாண்ட செட் அமைத்து டெஸ்ட் ஷூட் எடுக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சிவா இயக்கத்தில் சூர்யா
இதையடுத்து சூர்யா கைவசம் மேலும் ஒரு படமும் உள்ளது. கார்த்தியின் சிறுத்தை, அஜித்தின் வீரம், விவேகம், விஸ்வாசம், வேதாளம் போன்ற படங்களை இயக்கிய சிவா உடன் கூட்டணி அமைக்க உள்ளார் சூர்யா. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ளார். வாடிவாசல் மற்றும் பாலா இயக்கும் படத்தில் நடித்து முடித்த பின்னர் இப்படத்தின் பணிகளை தொடங்க உள்ளார் சூர்யா.
இசையமைப்பாளர் மாற்றம்
இப்படத்திற்கு டி.இமான் இசையமைப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் இப்படத்தில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதில் அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அனிருத் ஏற்கனவே சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் மற்றும் இயக்குனர் சிவா உடன் விவேகம் போன்ற படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்.... பீஸ்ட் சாதனையை முறியடித்ததாக பந்தா காட்டிய KGF 2 - ராக்கி பாயின் போங்கு வேலைகளை போட்டுடைத்த தளபதி ரசிகர்கள்