Anirudh music for Kamal movie Indian-2
கமல் - சங்கர் இணையும் ‘இந்தியன் - 2’ படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்-க்கு கிடைத்துள்ளது.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள படம் ‘இந்தியன் 2’.
இந்தப் படத்தில் நடிப்பதைப் பற்றி நடிகர் கமல் ஏற்கெனவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் மேடையிலேயே கூறியிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் கமல், இயக்குனர் சங்கர், தயாரிப்பாளர் தில் ராஜூ என மூவரும் ஒன்றாக மகிழ்ச்சியுடன் தகவலை பகிர்ந்து கொண்டனர்.
சமீப காலமாக இப்படத்திற்கு அனிருத் தான் இசைமைக்கவுள்ளார் என்று தகவல் பரவியது. தற்போது இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது படக்குழு.
சங்கர் - கமல் இணையும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவில்லை என்பதும் உறுதியாகியுள்ளது.
சங்கர், கமல், அனிருத் மூன்று பேரும் இணைந்து தயாராகப் போகும் இந்தப் படம் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதில் ஐயமில்லை.
