Anirudh given more confusion to ajith

இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்று அஜித்தின் 'விவேகம்'. இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் தீம் சாங் ஒன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதை அனிருத்தான் கம்போஸ் செய்திருக்கிறார்.

சமீபத்தில் அனிருத் இசையமைத்த அனைத்து பாடல்களும் ஹிட் அடிப்பதால் அவரை விவேகம் படத்திற்கு இசை அமைக்க படக்குழு முடிவு செய்திருக்கிறது. 

திரும்ப திரும்ப அந்த பாடல்களை கேட்டு
ஒருவழியாக அஜித் ஒன்றை தேர்வு செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

அஜித் தேர்வு செய்த தீம் பாடல், 'வேதாளம்'படத்தில் இடம்பெற்ற 'ஆலுமா டோலுமா' பாடலுக்கு நிகரானது என்றும் இந்த பாடல் உலகம் முழுவதும் ஹிட் அடித்து பிரபலமாகப் போவது உறுதி என்றும் படக்குழுவினர் கூறி வருகின்றனர்.

ஜேம்ஸ்பாண்ட் படத்திற்கு நிகரான ஆக்சன் காட்சிகள் அடங்கிய படம் என்றும் படக்குழுவினர்கள் கூறுகிறார்கள். 

விவேகம்'படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது.