கடும் புயல் வெள்ளத்தால் அமெரிக்க மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அமெரிக்காவில் நடத்தவிருந்த தனது இசைப் பயணத்தை ரத்து செய்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.

‘விவேகம்’ படத்தின் இசைக்காக அனிருத்திற்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வந்த வண்ணம் உள்ளன,

இந்த நிலையில் அவர் ‘நெவர் எவர் கிவ் அப்” என்ற பெயரில் அமெரிக்காவில் ஒரு இசை நிகழ்ச்சியை இந்த மாதம் நடத்துவதாக திட்டமிட்டு இருந்தார்.

ஆனால், சமீபத்தில் அமெரிக்காவில் பெய்த ஹரிக்கேன் புயல் மழையால் பல நகரங்கள் நீரில் மூழ்கி படுசேதம் அடைந்துள்ளன.

இந்த நிலையில் அனிருத், அமெரிக்காவில் நடத்தவிருந்த இசைப்பயணத்தை ரத்து செய்துள்ளார்.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">Due to the suffering and damage caused by Hurricane Harvey, our <a href="https://twitter.com/hashtag/NeverGiveUp?src=hash">#NeverGiveUp</a> tour has been pushed to a later date. Our prayers are with you🙏</p>&mdash; Anirudh Ravichander (@anirudhofficial) <a href="https://twitter.com/anirudhofficial/status/905756429197250560">September 7, 2017</a></blockquote>

<script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இதுகுறித்து அனிருத் தனது டிவிட்டரில், “அமெரிக்க மக்கள் ‘ஹர்க்கேன் புயலால் கடும் சேதத்தை சந்தித்துள்ள நிலையில் எனது ‘நெவர் கிவ் அப்’ இசை நிகழ்ச்சியை தற்போது ஒத்தி வைத்துள்ளேன். நிகழ்ச்சி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என்று அதில் தெரிவித்துள்ளார்.