‘என்னை அறிந்தால்’,’விஸ்வாசம்’படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ‘தல 60’படத்தில் அஜீத்துடன் இணைந்து நடிக்கப்போகும் அனிகா சுரேந்தரின், ஓணம்  பண்டிகை உடை அலங்காரத்துடன் வெளிவந்துள்ள, ஒரு புகைப்படத்தை அசந்துபோய் கமெண்ட் அடித்திருக்கிறார் விஜய் டிவியின் செல்லக் குட்டி ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ். டீன் ஏஜ் பருவத்துக்கே உரிய பேரழகுடன் அப்படத்தில் காட்சி தருகிறார் அனிகா.

மிக விரைவில் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் தல 60’படம் தொடர்பாக இன்னும் அதிகாரபூர்வமான செய்திகள் எதுவும் வெளியாகாத நிலையில்  நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் அஜீத் அப்பாவுடன் மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கவிருக்கும் இனிப்பான செய்தியை நடிகை அனிகா வெளியிட்டிருந்தார். அதற்கு அஜீத் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்து கமெண்டுகள் போட்டிருந்தனர். தொடர்ந்து இரு படங்களில் அஜீத் மகளாக நடித்ததுடன் அவரை பப்பா என்றே அனிகா அழைப்பதால் அவர் ஏறத்தாழ அஜீத்தின் மகள் போலவே ஆகிவிட்டார்.

இந்நிலையில் கேரளத்தில் களைகட்டியிருக்கும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வெள்ளைப் புடவை உடுத்தி, கரு நீல ப்ளவுஸ் அணிந்து கழுத்தில் ஒரு முரட்டு அணிகலனுடன்  ஓணம் அலங்கார உடை உடுத்திய படம் ஒன்றை அனிகா பதிவிட்டிருந்தார். அந்த உடையில் அவர் பேரழகியாக இருப்பதாகவும் விரைவில் கதாநாயகியாக வாழ்த்துக்கள் என்று பலரும் பதிவிட்டு வரும் நிலையில், விஜய் டி.வியின் பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளரும் அவ்வப்போது படங்களில் தலைகாட்டி வரும் நடிகையுமான ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ்,...Looking adorable da Anikha  Happy Onam...என்று கண்ணுபடப்போகுதய்யா ரேஞ்சுக்கு வர்ணித்திருக்கிறார்.