‘என்னை அறிந்தால்’,‘விஸ்வாசம்’ ஆகிய படங்களில் தல அஜித்திற்கு மகளாக நடித்து கவனம் ஈர்த்தவர் அனிகா சுரேந்திரன். குழந்தை நட்சத்திரமாக இருந்த அனிகா சுரேந்திரன் இப்பொது வளர்ந்து ஹீரோயின் லுக்கில் வலம் வருகிறார்.  

‘என்னை அறிந்தால்’,‘விஸ்வாசம்’ ஆகிய படங்களில் தல அஜித்திற்கு மகளாக நடித்து கவனம் ஈர்த்தவர் அனிகா சுரேந்திரன். குழந்தை நட்சத்திரமாக இருந்த அனிகா சுரேந்திரன் இப்பொது வளர்ந்து ஹீரோயின் லுக்கில் வலம் வருகிறார். 

கேரள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த அனிகா, மலையாளம் படம் ஒன்றின் தெலுங்கு ரீமேக் மூலமாக ஹீரோயின் அவதாரம் எடுக்க உள்ளார். அதற்கு முன்னதாகவே சோசியல் மீடியாவின் வைரல் குயினாக வலம் வரும் அனிகா. டாப் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். 

இவர் வயதுக்கு மீறி சில போட்டோ ஷூட் புகைப்படங்கள் எடுத்து கொள்வதாக, சிலர் தொடர்ந்து விமர்சித்தும் வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்களுடன் சமூகவலைதளத்தில் உரையாடிய அனிகா அப்போது ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அந்த வீடியோவில் திடீர் என ஒரு ரசிகர் "நான் உங்களுடைய தீவிர ரசிகன், உங்களை காதலிப்பதாக கூறி, நீங்கள் காதலை ஏற்கவில்லை என்று கூறினால் தற்கொலை செய்து கொள்வேன் என்று சொன்னால் என்ன சொல்வீர்கள் என கேள்வி ஒன்றை கேட்டு மிரளவைத்தார்.



அதற்கு பதிலளித்து அனிகா, அப்படி ஒரு நிலைமை எனக்கு ஏற்கனவே ஏற்பட்டுள்ளது. காதலிப்பதாக சொல்லி எனக்கு ஒரு மெயில் வந்தது. அந்த மெயிலை பார்க்கவே எனக்கு பயமாக இருந்தது. எனவே அதைப்பற்றி விட்டுவிடுங்கள், ஞாபகப்படுத்த வேண்டாம். என்று கூறியுள்ளார். அனிதாவின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Scroll to load tweet…