குழந்தை நட்சத்திரமாக இருந்தாலும் தனெக்கென ரசிகர் படையை கொண்டிருப்பவர் நடிகை அனிகா சுரேந்தர்.  தமிழில் 2015-ம் ஆண்டு அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அனிகா சுரேந்தர் அறிமுகமானார். அடுத்து  விஸ்வாசம்,  வினோத் இயக்கும் அடுத்த அஜித் படம் என நடித்து முடித்து விட்டார். 

இந்நிலையில் முகநூல் நேரலையில் அவரது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். அதில் தான், அடுத்த தமிழ் படங்களில் கமிட் ஆகவில்லை. எனக்கு தமிழ் தெரியாது. மலையாளம் மட்டுமே அறியும். மலையாளத்தில் எனக்கு பிடித்த நடிகர் துல்கர் சல்மான். தமிழில் விஜயை மிகவும் பிடிக்கும். அஜித் அடுத்து தான்.

 

பிடித்த கிரிக்கெட் வீரர் வீராத் கோலி என அவர்  பல விஷயங்களை அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார். அஜித்துடன் 3 படங்களில் நடித்திருந்தாலும் அவர் தனக்கு விஜயைத் தான் பிடிக்கும் என கூறியிருப்பது அஜித் ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.