படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு சென்ற இடத்தில் தயாரிப்பாளர் தன்னை மிரட்டி கீழே தள்ளி சீரழித்து விட்டதாக பிரபல நடிகை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்தவர் நடிகை ஏஞ்சலினா ஜோலி. தற்போது மீண்டும் திரைப்படங்கள் நடிப்பதில் தன்னுடைய முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், இவர் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு பிரபல தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனை சந்திக்க அவருடைய அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஏஞ்சலினா ஜோலியை  மிரட்டி கீழே தள்ளி  ஹார்வி வெயின்ஸ்டீன் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக தற்போது ஏஞ்சலினா ஜோலி குற்றம்சாட்டியுள்ளார்.

ஏற்கனவே ஹார்வி வெயின்ஸ்டீன்  மீது இது இதுவரை பல நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை அவர் மீது குவிந்துள்ள புகார்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால் தற்போது ஹாலிவுட் திரை உலகத்தை ஆண்ட முன்னணி நடிகை ஏஞ்சலினா ஜூலி,  இவர் மீது குற்றம் சாட்டியுள்ளதால் ஏதாவது நடவடிக்கை எடுக்கபடும் என நம்புவதாக ஹாலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிப்பட்டு வருகிறது.

மேலும்  ஹார்வி வெயின்ஸ்டீன் உள்ள குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண வேண்டும் என நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.