andriya talk about redy to act in without dress
பாடல், நடிப்பு என தன்னுடைய திறமையால் கோலிவுட் திரையுலகில் வலம் வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் நடிக்கும் படங்களில் கவர்ச்சிக்கு குறைவிருக்காது. அதே போல் ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்காமல் வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
தரமணி:
கடந்த ஆண்டு இவருடைய நடிப்பில் வெளிவந்த தரமணி, மற்றும் அவள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
மகளிர் தினம்:
இந்நிலையில் சமீபத்தில் மகளிர் தினத்தன்று சென்னையில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆண்ட்ரியா. சினிமாவில் பெண்களுக்கு இன்னும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை என நினைப்பதாகவும், ஆணாதிக்கம் நிறைந்தாகவே இருப்பதாக கருதுவதாக தெரிவித்தார். 
ஹீரோவை வைத்து எடை போடும் திறமை:
மேலும் ஒரு நடிகையின் திறமை அவர் எந்த ஹீரோவுடன் நடிக்கிறார் என்பதை பொருத்து தான் தீர்மானிக்கப்படுவதாகவும். கடந்த ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் தான் நடித்து வெளியான தரமணி படத்திற்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள் கிடைத்து என்றும் ஆனால் அதன் பின்னர் ஒரு பட வாய்ப்புப் கூட கிடைக்க வில்லை என்று கூறினார்.
நிர்வாணமாக கூட நடிப்பேன்:
மேலும் கவர்ச்சியாக உடை அணிந்து நடிப்பதால் மட்டும் மகிழ்ச்சி அடைந்து விடுவேன் என எதிர்பார்க்காதீர்கள். ஒரு போதும் அது தனக்கு மகிழ்ச்சிதராது. திரையில் நான் நிர்வாணமாக கூட நடிக்க தயார். ஆனால் அது கதைக்கு தேவையான காட்சியாக இருக்க வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.
