andriya interview issue

நடிகை ஆண்ட்ரியா நடித்து வெளிவந்த பல படங்களில் அவர் மிகவும் செக்ஸியாகத்தான் நடித்துள்ளார். அதிலும் அவர் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள 'அவள்' படத்தில் படு கிளாமராக நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அதில் ஆண்ட்ரியா பதில் சொல்லத் தயங்கும் அளவிற்கு, தொகுப்பாளர் இவரிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மேலும் இவர் நடித்த 'பச்சைக்கிளி முத்துச்சரம்', 'உத்தம வில்லன்',மற்றும் 'அவள்' படத்தில் சித்தார்த்துடன் நெருங்கிய காட்சிகளில் நடித்தது குறித்து தொகுப்பாளர் கேள்வி எழுப்பியுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு பலர் ஒரு நடிகையிடம் நேர்காணலில் எது போன்ற கேள்விகள் கேட்பது என, முறையில்லாமல் கேட்டுள்ளார் தொகுப்பாளர் என வசைபாடி வருகின்றனர். தொகுப்பாளர் இது போன்ற கேள்விகளை நேர்காணல் நிகழ்ச்சியில் கேட்டுள்ளது சபை நாகரிமற்றது என்றும் இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள நாம் அயல் நாட்டில் இல்லை தமிழ் நாட்டில் இருக்கிறோம் எனவும் பதில் கொடுத்து வருகின்றனர்.