திருமணமான நடிகர் ஒருவருடன் தான் சில காலம் உறவில் இருந்ததாகவும் அவர் தன்னை சீரழித்து ஒழித்துவிட்டதாகவும் பெயரைக் குறிப்பிடாமல் குறிப்பிட்டிருந்த ஒருவேளை நாளை அவர் பெயரை நாளை அம்பலப்படுத்தக்கூடும் என்றும் அதிர்ச்சி தகவல் ஒன்று நடமாடுகிறது.

சில நாட்களுக்கு முன்பு, ’நான் திருமணம் ஆன ஒரு நடிகரால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானேன்.அவர் என்னை தனது இச்சைக்குப் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிந்துவிட்டார்’ என்று நடிகை ஆண்ட்ரியா கூறியிருந்தார். இது நடந்தது பெங்களூரு விழா ஒன்றில். ‘புரோகன் விங்’என்ற பெயரில் அவர் எழுதியிருந்த கவிதை வெளியீட்டு விழாவில். அத்தொகுப்பின் கவிதைகளைப் படித்த பலர் ‘ஏன் பெரும்பாலான கவிதைகள் மிகவும் சோகமாகவே இருக்கின்றன?என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்தான் அது.
 
அத்தோடு விடாத அவர் அந்த நபரால் தான் மிகவும் நோய்வாய்ப்பட்டதாகவும் அதிலிருந்து மீண்டுவர  சில நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு ஆயுர்வேத சிகிச்சை பெற்று கொண்டதாகவும் இதுகுறித்தெல்லாம் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுதி வரும் ஒரு  புத்தகத்தில் தைரியமாக குறிப்பிட்டு இருப்பதாகவும்  தெரிவித்து இருந்தார். 

மக்கள் சும்மா இருப்பார்களா?   அந்த நபர் யார் என்று  தொடர்ந்து நச்சரிக்கவே, அதுகுறித்த முழுமையான தகவலை தான் ’புரோகன் விங்ஸ்’ புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதாகவும், தங்களுக்குள் நடந்த அனைத்தும் தகவல்களும் அதில் இடம்பெறும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது ஆண்ட்ரியா தனது  புத்தகத்தை வருகிற 17ஆம் தேதியன்று தன்னுடைய சமூக வலைத்தளம் பக்கத்தில் மீண்டும் வெளியிட இருப்பதாக சொல்லப்படுகிறது. அதில் அந்த திருமணமான நடிகரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருக்கும் பெரிய வீட்டுப் பிள்ளைதான் ஆண்ட்ரியாவின் அந்த சிக்கலில் மாட்டவிருப்பதாக சொல்லப்படுகிறது.