Asianet News TamilAsianet News Tamil

கண்ணாடி முன்னாடி கவர்ச்சியை பிரதிபலிக்கும் ஆண்ட்ரியா....ஹாட் பிசாசு என நெகிழ்ந்து போகும் ரசிகர்கள்

முன்னழகு தெரியும்படி கொடுத்துள்ள கிக் போஸ்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதோடு கண்ணாடி பற்றிக்கொள்ள போகிறது என்கிற கமெண்ட்களையும் நெட்டிசன்கள் இட்டு வருகின்றனர்.

Andrea Jeremiah latest hot photos front of mirror
Author
First Published Sep 19, 2022, 12:49 PM IST

பாடகையாக சினிமாத்துறைக்கு என்ட்ரி கொடுத்து தற்போது அறியப்படும் நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார் அண்ட்ரியா. பின்னகி பாடகி மற்றும் இசைக்கலைஞரான இவர் தமிழ், மலையாளம் மொழி படங்களில் நடித்துள்ளார். பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் கடந்த 2007 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகிற்கு நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக தோன்றியிருப்பார். தொடர்ந்து விஸ்வரூபம், தடகா, அரண்மனை, லோகம், தரமணி போன்ற வணிகரீதியாக வெற்றி அடைந்த படங்கள் பலவற்றிலும் நடித்து உள்ளார்.

பின்னர் வடசென்னை, அரண்மனை 3, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று கொடுத்தது. முன்னதாக கண்ட நாள் முதல் படத்தில் திருமணப் பெண்ணாக அங்கீகரிக்கப்படாத பாத்திரத்தில் நடித்து இருந்தார். இதற்கிடையே தன்னைவிட மூத்த பிரபலம் ஒருவருடன் வாழ்ந்து வந்ததாகவும், பிரபல இசையமைப்பாளர் ஒருவருடன் காதல் உறவில் இருந்ததாகவும் இவர் குறித்த பல கிசுகிசுக்கள் வெளியானது.

மேலும் செய்திகள்...முடிவுக்கு வரப்போகிறதா பாரதி கண்ணம்மா...? யாரும் எதிர்பாராத தருணம்..! வெளியான பரபரப்பு புரோமோ!

மேலும் செய்திகள்: வாத்தி கம்மிங்... திடீரென ரிலீஸ் தேதியை அறிவித்து ஷாக் கொடுத்த தனுஷின் வாத்தி படக்குழு - எப்போ ரிலீஸ் தெரியுமா

பின்னர் அந்த உறவு பிரிவு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான ஆண்ட்ரியா சினிமா உலகில் இருந்து கொஞ்ச நாள் ஒதுங்கி இருந்தார். அவரே இது குறித்தான விளக்கத்தையும் அளித்திருந்தார். தற்போது இது போன்ற விஷயங்களில் இருந்து வெளிவந்த ஆண்ட்ரியா முழு நேரமும் சினிமாவில் கவனம் செலுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் ஓ..சோல்டரியா...என்னும் பாடலை பாடி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தார். தற்போது இவர் நடிப்பில் பிசாசு 2 வெளியாக உள்ளது. அதேபோல அனல் மேலே பனித்துளி, மாளிகை, செல்லக்கூடாது உள்ளிட்ட பல படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

மேலும் செய்திகள்: இரவு பார்ட்டியில் மூச்சுமுட்ட குடித்துவிட்டு... போதையில் குத்தாட்டம் ஆடிய நடிகை ராஷ்மிகா - வைரலாகும் வீடியோ
 

 

மேலும் டப்பிங் கலைஞராகவுமான இவர் வேட்டையாடு விளையாடு, ஆடுகளம், நண்பன், தங்க மகன் மற்றும் ஹாலிவுட் படமான அவெஞ்சர்ஸ்  உள்ளிட்டப்பட்டிருக்கு நாயகிகளுக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார். இதற்கிடையே தற்போது அழகான கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் ஆண்ட்ரியா. தற்போது கண்ணாடி முன் நின்று முன்னழகு தெரியும்படி கொடுத்துள்ள கிக் போஸ்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதோடு கண்ணாடி பற்றிக்கொள்ள போகிறது என்கிற கமெண்ட்களையும் நெட்டிசன்கள் இட்டு வருகின்றனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios