Asianet News Tamil

அமீருடன் நான் அப்படி பண்ணியிருக்கக்கூடாது.. கவிதை நடிகையின் தாமதமான கதறல்

ஆண்ட்ரியா ஒரு கார்ப்பரேட் நடிகை. ஆனால் வெற்றிமாறனின் வட சென்னை படத்தில் அமீருக்கு ஜோடியாகவும், அவரோடு மிக நெருக்கமாகவும் நடித்திருந்தார். 

andrea feeling for one scene she acted in vada chennai with ameer
Author
Tamil Nadu, First Published Mar 2, 2020, 5:06 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

* ஏஸியாநெட் தமிழ்! இணையதளம் சுட்டிக்காட்டியது போலவே, நயன் தாராவுக்கு அம்மன் வேடம் சரியாக பொருந்தவில்லை! ரம்யா கிருஷ்ணனுக்குதான் பக்கா மேட்ச்! என்று ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் வறுத்தெடுப்பதை மற்ற ஊடகங்களும் சுட்டிக் காட்ட துவங்கியுள்ளன. நயன் தாராவின் உடல் மெலிந்து, கம்பீரமான தோற்றம் இல்லாமல், தெய்வீக கடாட்சம் முகத்தில் இல்லாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டு வருகிறது. 
நொந்தே இருக்கிறார் நயன். 

*    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹரி - சூர்யா கூட்டணி மீண்டும் அமைந்தேவிட்டது. ‘அருவா’ என்று மிரட்டல் பெயரோடே களமிறங்கியுள்ளனர். அடுத்த மாதம் ஷூட்டிங் துவங்கி, தீபாவளிக்கு படம் ரிலீஸாம். ஹரி வழக்கம்போல் தனது தாறுமாறான வேகத்தில் படத்தை எடுக்கப்போகிறாராம். சூர்யாவும், சிறுத்தை சிவாவை நம்பியிருந்து ஏமாந்து நொந்ததால் இப்படத்தில் கமிட் ஆகிவிட்டாராம். 
சிங்கம் 3-ல் சொதப்பிய கூட்டணி, இதில் வெல்லுதான்னு பார்ப்போம். 

*    ஆண்ட்ரியா ஒரு கார்ப்பரேட் நடிகை. ஆனால் வெற்றிமாறனின் வட சென்னை படத்தில் அமீருக்கு ஜோடியாகவும், அவரோடு மிக நெருக்கமாகவும் நடித்திருந்தார். இந்நிலையில் ‘அந்தப்படத்தில் நான் அப்படி நடித்த பிறகு, அந்த மாதிரியான காட்சிகள் உள்ள படங்களில் நடிக்க என்னை தொடர்ந்து அழைத்தனர். ஆனால் நான் மறுத்துட்டேன். ஆக்சுவலா நான் வடசென்னை படத்தில் அப்படி நடித்திருக்க கூடாது.’ என்றிருக்கிறார். 
வெளுப்பா விடிஞ்ச பிறகு பெட்ஷீட்டை போர்த்தி என்ன புண்ணியம்?

*    லாரன்ஸ் ஒரு வித்தியாசமான கலைஞர். தன் சம்பாத்தியத்தில் கணிசமான தொகையை பலவகை நலிந்தோர்க்காக செலவு செய்கிறார். மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு  டான்ஸ் ஸ்கூல் மற்றும் வாய்ப்புகள், ஏழை பிள்ளைகளுக்கு படிப்புச் செலவு, ஏழைமுதியோருக்கு வீடு என்று அசத்தியவர் இப்போது திருநங்கைகளுக்க் வீடு கட்டிக் கொடுக்கும் பிளானிலும் அசத்தியுள்ளார். இதற்கு அவர் இப்போது இயக்கும் படத்தின் ஹீரோவான அக்‌ஷய் குமார் ஒன்றரை கோடி நிதியுதவி தந்திருக்கிறார். 
(பக்‌ஷிராஜனுக்கு பெத்த மனசுதான்)

*    வரலெட்சுமி ஒரு அசால்ட் பொண்ணுதான். எதையும் கெத்தாக செய்யக்கூடிய ஒரு நடிகை. இந்த நிலையில் ‘நான் ஒரு பிரபல ஹீரோவின் வாரிசு என்று தெரிந்தும் கூட, பட வாய்ப்புக்காக என்னை படுக்கைக்கு அழைத்தனர். அப்படி ஒரு வாய்ப்பே வேண்டாம் என்று மறுத்தேன். அவர்கள் பேசிய ஆடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது.’ என்று கோடம்பாக்கத்தில் ஒரு ஆட்டோபாமை வெடிக்க வைத்துள்ளார். 
வருவின் இந்த வேற லெவல் புகாரோ சரத்குமாரையே அதிர வைத்துள்ளதாம். சொந்த பொண்ணுக்கான பிரச்னையையே கவனிக்க தவறுன மனுஷன் அரசியல்ல வந்து என்னத்த சாதிக்கிறாரு? என்று வெளுக்கின்றன விமர்சனங்கள். 
(வானம் கொட்டட்டும் தப்பில்லை. ஆனால் பொண்ணே இப்படி கொட்டலாமா?)

Follow Us:
Download App:
  • android
  • ios