பெண்கள் குறித்து அவதூறான  கருத்துக்களை கூறியுள்ள நடிகர் பாக்யராஜ் மீது  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆந்திர மகளிர் ஆணையம் தமிழ்நாடு மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தவறு அந்த இளைஞர்கள் மீது மட்டுமல்ல,  பாதிக்கப்பட்ட பெண்கள் மீதும் இருக்கிறது என நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் அதிரடியாக தெரிவித்திருந்தார்.  அவரின் பேச்சு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

சமீபத்தில் தமிழகத்தையே உலுக்கிய பாலியல் வழக்கு என்றால் அது பொள்ளாச்சி சம்பவமாகத்தான் இருக்கும். இச்சம்பவம்  கொங்கு  மண்டலத்துக்காரர்களுக்கு மிகுந்த அவப்பெயரை ஏற்படுத்தி தந்திருக்கிறது.   இச்சம்பவம் குறித்து தமிழகமே தனது கண்டனத்தை பதிவுசெய்து வரும் நிலையில்,  இதுகுறித்து பாக்யராஜ்  தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . திரைப்பட இயக்குனர் ராகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள "கருத்துக்களை பதிவு செய்"  என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது அதில் இயக்குநர் கே பாக்யராஜ் கலந்து கொண்டார். 

அப்போது பேசிய அவர் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பெண்களின் பலவீனத்தை சில இளைஞர்கள் தவறாக பயன்படுத்திக் கொண்டனர் என்றார்.  தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி விவகாரத்தில் தம்மை பொருத்தவரையில்  இளைஞர்கள் மட்டும் தவறு செய்யவில்லை. அதில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்களிடமும் தவறு இருக்கிறது என்றுதான் நான் சொல்லுவேன். என பேசினார். இந்த நிலையில், ஆந்திர மகளிர் ஆணையத் தலைவி வாசிரெட்டி பத்மா, தமிழக மகளிர் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அதில், ஒருசில சம்பவங்களை சுட்டிக்காட்டி ஒட்டுமொத்த மகளிர் இனத்தையும் அவமதிக்கும் வகையில் நடிகர் பாக்யராஜ் பேசியிருக்கிறார் எனவே அவர் பெண்களை அவமரியாதை செய்துள்ளார். எனவே  அவர் மீது சட்டரீரியாக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.