கொரோனா இரண்டாவது அலை பரவலை தடுக்கும் பொருட்டு... இந்தியாவின் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், இன்று முதல் தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் அரசு விதிமுறையை பின்பற்றி திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர். இது திரையரங்க உரிமையாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. 

கொரோனா இரண்டாவது அலை பரவலை தடுக்கும் பொருட்டு... இந்தியாவின் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், இன்று முதல் தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் அரசு விதிமுறையை பின்பற்றி திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர். இது திரையரங்க உரிமையாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

கொரோனா பாதிப்புகள் குறைய குறைய, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கேரளா போன்ற மாவட்டங்களில் திரும்பவும் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வரும் சம்பவங்களும் நடப்பதால், மத்திய - மாநில அரசுகள் மக்களின் நலனை கருத்தில் கொண்டு முடிவெடுத்து வருகிறது.

தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டு, கொரோனா தொற்று கட்டுக்குள் வந்து விட்டாலும் இதுவரை, திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் திரையரங்கில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்ட படங்கள் அடுத்தடுத்து, ஓடிடி தளத்தில் வெளியாகி வருவது திரையரங்க உரிமையாளர்கள், விநாயகஸ்தர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று, முதல்வரின் உத்தரவின் பெயரில் ஆந்திரா - தெலுங்கானா மாவட்டத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டது. முதல் நாளே, சுமார் 5 படங்கள் வெளியான நிலையில்... ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர். அரசின் வழிகாட்டுதல் படி 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில், அனைத்து திரையரங்குகள் மற்றும் மால்களில் 50 சதவீத இருக்கைகளும் நிரம்பி இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை நாட்கள் என்பதால் இன்னும் அதிகமான ரசிகர்கள் திரையரங்கிற்கு படையெடுப்பார்கள் என திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழத்தில் ரசிகர்கள் இல்லாமல் காத்து வாங்கி வரும் திரையரங்குகளுக்கு எப்போது மத்திய - மாநில அரசுகள் அனுமதி கொடுப்பார்கள் என்பதே தற்போது, தமிழக திரையரங்க உரிமையாளர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. என்னதான் ஓடிடி திரையரங்கில் படங்களை உடனுக்குடன் பார்த்தாலும்... திரையரங்கில் கத்தி கூச்சல் போட்டு கொண்டு பார்க்கும் ரசிகர்கள் அந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.