சர்வதேச அளவில் மிகவும் வைரலாகி உள்ளது ‘மீ டூ’, இதன் மூலம் அடுத்தடுத்த எந்த பிரபலத்தின் பெயர் வெளியாகுமோ என கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருவதாக நெருங்கிய வட்டாரத்தினர் சிலர் கூறி வருகிறார்கள்.

Metoo  இயக்கத்தை துவங்கியது ஹாலிவுட் பிரபலம் என்றாலும், இதனை கோலிவுட் வட்டாரத்தில் மிகவும் பிரபலமாக்கிய பெருமை பாடகி சின்மயியை தான் சேரும். அவர் வைரமுத்து மீது புகார் செய்ததால் மீ டூ இயக்கம் இங்கும் பிரபலமானது. தொடர்ந்து நடிகைகள், பாடகிகள், டிவி பெண் தொகுப்பாளர்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், பாடகியும், தொகுப்பாளினியுமான ஸ்ரீரஞ்சனி வில்லன் நடிகர் ஜான் விஜய் மீதும், கடம் வித்வான் உமா சங்கர் மீதும் பாலியல் குற்றம் சாட்டினார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து நடிகர் ஜான் விஜய்யிடம் இது குறித்து கேட்டபோது ’சாக்கடையில் கல் வீசினால் நம் மீது தெறிக்கும் என்று சொல்வார்கள். இந்த வி‌ஷயம் குறித்துப் பேசுவதையும் சாக்கடையில் கல் வீசுவதற்கு நிகரானதாகவே நினைக்கிறேன்’ என கூறினார். அதேநேரம் ஜான் விஜய்யின் மனைவி இந்த சம்பவம் குறித்து தன்னிடம் பேசியதாகவும், அதற்காக தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக ட்விட்டர் மூலம் தெரிவித்தார் ஸ்ரீரஞ்சனி.

தனக்கு கடம் வித்துவான்... ‘உமா சங்கர்’ தரப்பில் இருந்து சிலர் அணுகி ட்விட்டர் பதிவை, எடுக்குமாறு வலியுறுத்தினர். ஆனால் சில நண்பர்கள் இந்த விஷயத்தில் தலையிட விருப்பம் இல்லை என கூறியதும் தனக்கு தெரியும். 

ஆனால் இந்த பதிவை நீக்க கூறி தன்னிடம் கூறியது, மிரட்டல் போல் இருந்தது என கூறியுள்ளார். அதே போல் தன்னிடம் இவர்கள் இருவர் மட்டுமே தவறாக நடந்து கொண்டார்கள் என்றும், கூறியுள்ளார்.