முன்பெல்லாம் சினிமா நடிகர்களுக்கு தான் ரசிகர்கள் இருப்பார்கள், ஆனால் இப்போது பிரபல தொகுப்பாளர்களுக்கும் நிறைய ரசிகர்கள் வந்துவிட்டனர்.
அதில் முக்கியமானவர் ரியோ இவர் தற்போது தொகுப்பாளர் மட்டும் இல்லாமல் பிரபல தொலைக்காட்சி சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார், இவருக்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்கள் அதிகம்.
சமீபத்தில் இவர் விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாக கூறி தன் காதலியை நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டு அதன் புகைப்படத்தை இணையத்தளத்தில் பதிவேற்றி இருந்தார்.
இந்நிலையில் அவருடைய வருங்கால காதல் மனைவி ஸ்ருதியின் பிறந்தநாளை ஒரு மாலில் விமர்சையாக கொண்டாடியுள்ளார். இதற்கு ஸ்ருதியின் நண்பர்களை அவருக்கே தெரியாமல் அழைத்து ஸ்வீட் சர்பிரைஸ் கொடுத்துள்ளார்.
இப்போது அவரின் பிறந்த நாள் கொண்டாடடும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ரியோ.
