anchor priyanka open talk her second marriage
ஒரு லோக்கல் சேனலில் அழகு குறிப்புக்கள் சொல்லும் தொகுப்பாளராக அறிமுகம் ஆகி, இன்று முன்னணி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா.
சமீபத்தில் இந்த தொலைக்காட்சி நடத்திய விருது வழங்கும் விழாவில் சிறந்த தொகுப்பாளர் என்கிற விருதையும் இவர் தட்டி சென்றார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் தான் வாழ்க்கையில் கடந்து வந்த சோகம், நெருக்கடிகள் என பலவற்றை பிரியங்கா பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவரிடம் தொகுப்பாளர் உங்களுடைய இரண்டாவது திருமண வழக்கை எப்படி போகிறது என தயக்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பிரியங்கா ஏன் இதை தயக்கத்தோடு கேட்குறீங்க என கூறி தன்னுடைய இந்த இரண்டாவது திருமண வழக்கை மிகவும் நன்றாக இருக்கிறது என கூறியுள்ளார்.
பலரும் இவருக்கு நடந்தது முதல் திருமணம் என நினைத்த நிலையில் இந்த பேட்டியின் மூலம் பிரியங்காவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி அது விவகாரத்தில் முடிந்த தகவல் வெளியாகியுள்ளது.
