பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பிரபலமாகியவர் 'பூஜா'.  'களம்' 'பீட்சா' உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு, அதே தொலைக்காட்சியில் பணிபுரிந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

மேலும் கடந்த வருடம், தங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக கணவருடன் இருந்த, உறவை பரஸ்பரம்மாக முறித்து கொள்வதாக அறிவித்து அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். இனி தன்னுடைய முழு கவனத்தையும் திரைப்படங்கள் நடிப்பதில் செலுத்த உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இவர் தன்னுடைய நண்பர் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவரையே இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் அவ்வப்போது அவருடைய ஆண் நண்பருடன் எடுத்து கொண்ட நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு காதலை உறுதி செய்தார்.

View post on Instagram

இந்நிலையில் விவாகரத்தான இரண்டே வருடத்தில், KGF பட புகழ் ஜான் என்பவரை நேற்று (ஏப்ரல் 15) எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். இந்த புகைப்படத்தையும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.