பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக மிகவும் பிரபலமானவர் மணிமேகலை. பெற்றோரை எதிர்த்து, தன்னுடைய காதலர் ஹுசைன் என்பவரை, கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பும், தொகுப்பாளினியாக இவருந்த இவர், விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிஸ்டர் & மிசஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் செய்த சேட்டைகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

நகரத்து வாழ்க்கையை விட கிராமத்து வாழ்க்கையால் ஏற்பட்டு, இந்த லாக் டவுன் நாட்களை ஒரு கிராமத்தில் தன்னுடைய கணவருடன் சேர்ந்து கழித்து வருகிறார். அவ்வப்போது அந்த கிராமத்தில் உள்ள சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடுவது, குறும்புத்தனம் செய்வது போன்ற வீடியோக்களை  வெளியிட்டு அவருடைய ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய பெயரில் 'மணிமேகலை முறுக்கு பேக்டரி' ஒன்றை ஆரம்பித்துள்ளதாக கூறி, வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். மேலும் இரண்டு பெண்கள் முறுக்கு போட, மணிமேகலை அதை எண்ணெயில் பெரிய வைத்து எடுக்கிறார். கலகலப்பான இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. கொரோனா பிரச்சனை காரணமாக, ஊரே அடைபட்டு கிடைக்கும் போதிலும் கூட... மணிமேகலை அந்த கிராமத்தில் சுதந்திர பறவையாய் சுற்றி வருகிறார்.

அந்த வீடியோ இதோ: