பிரபல தனியார் தொலைக்காட்சியில், தொகுப்பாளராக அறிமுகமாகி  பிரபலமானவர் தொகுப்பாளினி மணிமேகலை, இவருக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

இந்நிலையில் இவர் கடந்த வருடம், ஹுசைன் என்பவரை காதலித்து பெற்றோரை மீறி திருமணம் செய்துகொண்டார். இவருடைய காதலுக்கு பெற்றோர், மற்றும் சகோதரர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் வீட்டை மீறி வெளியே வந்து திருமண பந்தத்தில் இணைந்தார்.

திருமணத்திற்கு, பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வரும் இவர், தற்போது Mr &Mrs சின்னத்திரை என்கிற நிகழ்ச்சியில் தன்னுடைய கணவருடன் கலந்து கொண்டுள்ளார். 

இவர்கள் இருவரும்,  இணைந்து இந்த நிகழ்ச்சியில் நடனமாட உள்ளனர்.  மணிமேகலையின் கணவர் ஒரு நடன கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிகழ்ச்சியில் மணிமேகலை, பேசும்போது...  தங்களுடைய காதல் 9 -பது மாத காதல் தான்.  பெற்றோரை மீறி திருமணம் செய்து கொண்டோம் தற்போது கஷ்டப்படுகிறோம்.  பெற்றோருடன் இருந்த போது பணத்திற்காக எப்போதும் கஷ்டப்பட்டது இல்லை.  

ஆனால் தற்போது,  பணத்துக்காக மட்டும் தான் தன் கஷ்டப்படுவதாகவும் அதுவும் கணவரை பார்த்தால் அந்த கஷ்டம் கூட பறந்து விடும் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.  மேலும் தன்னுடைய அம்மா, அப்பா ஆகியோரை மிஸ் செய்வதாகவும்...அவர்களிடம் பேச வேண்டும் என  தோன்றினாலும் நன்றாக சம்பாதித்து நல்ல நிலைக்கு வந்த பிறகு தான் அவர்களிடம் பேசுவேன் என கூறியுள்ளார்.