விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமைகள் இருந்தாலும், அவர்களில் டிடி எப்போதுமே ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தான். இவர் கலகலப்பாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் விதம், நிகழ்ச்சிகளை விட்டு அகலாமல் தொலைக்காட்சி முன்பு அமர வைத்துவிடும். 

விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமைகள் இருந்தாலும், அவர்களில் டிடி எப்போதுமே ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தான். இவர் கலகலப்பாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் விதம், நிகழ்ச்சிகளை விட்டு அகலாமல் தொலைக்காட்சி முன்பு அமர வைத்துவிடும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

டிடி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து கொண்டேனா திரைப்படங்களிலும் நடிக்க துவங்கி விட்டார். வாழ்க்கையில் பல கஷ்டங்கள் வந்தாலும் அதனை பெரிதாக எடுத்து கொள்ளாமல் தொடர்ந்து முன்னேற்றம் ஒன்றில் தான் கவனம் செலுத்தி வருகிறார்.

அதேபோல் டிடியை பொறுத்தவரை, அனைவரிடத்திலும் மிகவும் அன்பாக பழக கூடியவர். சமீபத்தில் கூட இவரை கண்ட சந்தோஷத்தில், ரசிகை ஒருவர் கட்டி பிடித்து அழுத வீடியோ வைரலாகியது.

மேலும் செய்திகள்: ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய நடிகை நிலா! 36 வயதிலும் மூழ்கடிக்கும் கவர்ச்சி!

இதை தொடர்ந்து, தன்னுடைய ரசிகரான 10 வயது சிறுவன் எந்த அளவிற்கு தன்னிடம் உண்மையாக நடந்து கொண்டான் என்பதை விளக்கும் விதமாக, குட்டி கதை ஒன்றை கூறியுள்ளார்டிடி . மேலும் அந்த சிறுவனுடன் எடுத்து கொண்ட வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இதில்... ''10 வயது மதிக்கத்தக்க சிறுவன் அவனது பெற்றோருடன் தன்னிடம் வந்து என்னுடன் புகைப்படம் எடுக்க ஆசைப்படுவதாக தெரிவித்தான். எனவே நானும் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். பின்பு மீண்டும் என்னிடம் வந்த அவன் என்னை மிகவும் பிடிக்கும் என்றும் அதனை சொல்வதற்கு பயமாக இருந்ததாகவும் தெரிவித்து மற்றொரு புகைப்படம் எடுக்க வேண்டும் என கூறி புகைப்படம் எடுத்து கொண்டான். எவ்வளவு இனிமையானவனாகவும் மரியாதை மிக்கவனாகவும் அவன் இருந்தான். இந்த அன்பு விலை மதிக்கமுடியாதது என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: ரஜினி, அஜித், விஜய் என யாரையும் விட்டு வைக்காத சிவகார்த்திகேயன்! அறிய புகைப்பட தொகுப்பு

பின்னர் நான் காரில் ஏறிய போது நான் அவனை பார்த்து கையசைத்தேன். அப்போது அவன் ஃபோனில் என்னுடன் எடுத்த ஃபோட்டோவை வால் பேப்பராக வைத்திருந்தான். நீ எங்க இருந்தாலும் சிறப்பானவனாகவும் ஜென்டில்மேனாகவும் வளர்வாய் உன் தோழிகள் மிகவும் அதிர்ஷ்டசாலி உன் பெற்றோரும் என்று குறிப்பிட்டுள்ளார் டிடி.

View post on Instagram