விஜய் டிவி தொகுப்பாளினி டிடி, தன்னுடைய இஸ்லாமிய நண்பர்களுக்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பாடல் மூலம், கால்களை அசைக்க முடியாமல் ஒரே இடத்தில் இருந்தபடி, நடனம் ஆடி ரம்ஜான் வாழ்த்துக்களை கூறியுள்ள வீடியோவிற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

சின்னத்திரையில் கிட்ட தட்ட 15 வருடங்களாக கலக்கி வரும் விஜய் டிவியின் செல்ல பிள்ளை டிடி, சமீப காலமாக வெள்ளித்திரையில் தன்னுடைய திறமையை காட்ட துவங்கிவிட்டார். மேலும் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி விதவிதமாக புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.

கடந்த வாரம் கூட  டிடி படுக்கையில் இருக்கும் போட்டோ ஒன்றை ஷேர் செய்தார். ரொம்ப க்ளோஸாக எடுக்கப்பட்ட அந்த போட்டோவை பார்க்கும் போது டிடி டிரெஸ் அணிந்திருப்பது போன்று தெரியவில்லை. அந்த போட்டோவை சட்டென பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் டிரெஸ் போட்டிருக்கீங்களா? என்று கேள்வி கேட்கும் அளவிற்கு இருக்கிறது என ரசிகர்கள் விமர்சித்து வந்தனர்.

மேலும் இந்த ஊரடங்கு ஓய்வில், போர் அடிக்கும் போதெல்லாம், ரசிகர்களுடன் லைவ் சாட் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று, ரம்ஜான் பண்டிகை கொண்டாப்பட்ட நிலையில், தன்னுடைய இஸ்லாமிய நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு, வித்தியாசமாக தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக, 'ஜோதா அக்பர்' படத்தில், இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான பாடலுக்கு மிகவும் நளினமாக டான்ஸ் ஆடி, அந்த வீடியோவை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார். தன்னுடைய கால்களை அசைக்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

அந்த வீடியோ இதோ...