தொகுப்பாளினி டிடிக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இவருடைய கலகலப்பான பேச்சு, டிவி முன் அமரும் அனைவரையும் கவர்ந்து விடும். இதனால் இவருக்கு பல பிரபலங்கள் கூட ரசிகர்களாக உள்ளனர்.

வாழ்க்கையில் ஆயிரம் கஷ்டம் இருந்தாலும் அவை அனைத்தையும் வெளியில் காட்டி கொள்ளாமல் தொடர்ந்து, சின்னத்திரை, வெள்ளி திரை என 20 வருடங்களாக வெற்றி நடை போட்டு வருகிறார் டிடி.

இவர் மட்டும் இன்றி இவருடைய சகோதரி பிரியதர்ஷினியும் தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 

இந்நிலையில் டிடி தொகுப்பாளராக 20 வருடத்தை நிறைவு செய்ததை ஒட்டி இவருக்கு பலர் பாராட்டுக்கள், மற்றும் விருதுகள் கொடுத்து கௌரவித்தனர்.  

ஆனால் காமெடி நிகழ்ச்சி ஒன்றில் இவருக்கு கொடுக்கப்பட்ட பரிசு டிடியை மேடையிலேயே அழ வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து தாங்கள் கொடுக்கும் பரிசு,  சற்றும் எதிர்பாராத பரிசாக இருக்க வேண்டும் என எண்ணி, டிடி அவரது அப்பாவுடன் குடும்பமாக இருப்பது போல் ஒரு ஓவியம் வரைந்து கொடுத்துள்ளனர். 

அதைப்பார்த்ததும் டிடி, மேடையிலேயே அழ, அங்கு வந்திருந்த அவரது அக்கா, மற்றும் அம்மாகவும் அழுதுவிட்டனர்.

இந்த ஸ்பெஷல் பரிசு பற்றி டிடியின் அக்கா பிரியதர்ஷினி ஊடகம் ஒன்றில் கூறுகையில்...  அந்த ஓவியம் நாங்கள் யாரும் எதிர்ப்பார்க்காத ஒன்று, அந்த நிமிடம் அப்பாவே எங்கள் அருகே வந்தது போல் இருந்தது.

ஏதோ ஷோ செய்தோம் ஒரு ஷீல்டு கொடுப்போம் என்றில்லாமல் டிடியை மனதில் வைத்து இப்படி ஒரு ஸ்பெஷல் பரிசை கொடுக்க யோசித்தவர்களையும், வரைந்த ஓவியருக்கும் என்னோட பாராட்டுக்கள் என கூறியுள்ளார்.