தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பல நடிகைகளுக்கும் இருக்கும் ஒரு ஆசை, எப்படியாவது தல அஜித்துடன் இணைந்து ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது தான். ஆனால் இந்த கனவு நினைவாவது ஒரு சிலருக்கு மட்டும் தான். 

சமீப காலமாக முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் கூட அஜித்துடன், இணைந்து ஒரு படத்திலாவது, நடித்து விட வேண்டும் என தன்னுடைய ஆசையை தெரிவித்துள்ளார்.

 

ஆனால் அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும், அதனை வேண்டாம் என மறுத்து விட்டாராம் பிரபல தொகுப்பாளினி டிடி. இதற்கு காரணம் இவருக்கு காலில் செய்யப்பட்ட 
 அறுவை சிகிச்சைதான். இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் சில காலம், டிடி விஜய் டிவியில் தொகுத்து வழங்குவதற்கு கூட இடைவெளி விட்டிருந்தார். 

உடல் நலம் தேறி இவர் என்ட்ரி கொடுத்தது, சின்னத்திரைக்கு மட்டும் அல்ல வெள்ளி திரைக்கு தான். பா.பாண்டி படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் தற்போது விக்ரமுடன் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அதே போல் சின்னத்திரையில் நடுவராகவும் களம் இறங்கியுள்ளார். 

சமீபதத்தில் இவர் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், அஜித் படத்தில் நடிக்க வேண்டும் என்பது பலரது ஆசை, கனவும் கூட... ஆனால் அந்த வாய்ப்பு தனக்கு கிடைத்தும் அந்த வாய்ப்பை மறுத்து விட்டேன். இதற்கு முக்கிய காரணம் என்னுடைய காலில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை தான். இதனால் நடிக்க கூட முடியவில்லை. இப்போது நிலைதான் கூட அந்த சம்பவம் தனக்கு கஷ்டமாக உள்ளது என கூறியுள்ளார் டிடி.