anchor and comedy actor jegan turn to hero
தமிழ் திரை உலகில், தொடர்ந்து பல டிவி தொகுப்பாளர்கள் மற்றும் காமெடி நடிகர்கள் ஹீரோவாக வெள்ளித்திரையில் கால் பதித்து கலக்கி வருகின்றனர்.
அந்த வகையில், பிரபல தொலைக் காட்சியில் இருந்து வெள்ளித்திரையில் தனக்கென ஒரு ரசிகர்கூட்டத்தை உருவாக்கி முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன். இவரைத் தொடர்ந்து மாகாபா ஆனந்த் உள்ளிட்ட நடிகர்கள் இடம் பிடித்தனர்.

இந்நிலையில் இவர்களைத் தொடர்ந்து மனிதன் பாதி, மிருகம் பாதி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி, கண்ட நாள் முதலாய் படத்தில் காமெடி நடிகராக அறிமுகமான ஜெகன் தற்போது எனக்கு 'இன்னும் கல்யாணம் ஆகல' என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆக உள்ளார்.
இந்தப் படத்தில் கதாநாயகியாக ரஹானா என்கிற புதுமுகம் அறிமுகமாகிறார். பாடலாசிரியர் பிறைசூடன் வில்லனாக அறிமுகமாகிறார். மேலும் இந்தப் படத்தில் ஜெகன் போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தில் நடிக்க உள்ள தாகவும். படம் முழுக்க காமெடியை மையப்படுத்தியே எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் ஜெகன் பல தமிழ்ப் படங்களில் நடித்தாலும், இவருக்கு சிறந்த படமாக அமைந்தது, சூர்யாவுடன் நடித்த அயன், மரியான், அம்புலி போன்ற படங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
