சசிகலா முதல்வராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டது குறித்து நடிகர் ஆன்நத்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியபோது
அதிமுகவின் இந்த அவசர முடிவு எதற்கு என்று தெரியவில்லை என்றும் . யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம் என்று சட்டப்படி இருந்தாலும் இந்த அவசரம் ஏன் என்று தமிழக மக்களுக்கு புரியவில்லை.
அண்டை மாநிலமான புதுச்சேரியில் நாராயணசாமியை பலர் உதாரணமாக கூறுகின்றனர். ஆனால் அவர் பழம்பெரும் அரசியல்வாதி. மத்திய அமைச்சர் உள்பட பல்வேறு பதவிகளில் இருந்தவர். அவரின் அரசியல் வாழ்க்கையோடு இவரை ஒப்பிட்டால் அது தவறு.
மேலும் கடற்கரையில் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள அம்மாவின் ஆன்மா எதையோ தமிழகத்திற்கு சொல்ல வருகிறது. வர்தா புயல், ஜல்லிக்கட்டு போராட்டம், எண்ணெய் கொட்டிய பிரச்சனை அனைத்தும் கடற்கரையிலே ஏற்படுவதால் அம்மாவின் ஆன்மாவிற்கு மதிப்பு கொடுத்து அதிமுகவினர் கொஞ்சம் நிதானமாக யோசித்து செயல்பட வேண்டும் என்று தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.
மேலும் ஒரு கட்சியின் தலைவரை அந்த கட்சியின் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது தவறு அல்ல. ஆனால் தமிழக முதல்வர் பதவியை ஏற்கும் முன் கண்டிப்பாக மக்களிடம் அவர்கள் அனுமதி கேட்க வேண்டும்.
தமிழகத்தின் முதல்வர் பதவி அம்மாவிற்குத்தான் என்று தெருத்தெருவாக வெயிலில் அலைந்து பிரச்சாரம் செய்தவர்களில் ஒருவர் நான் என்பதால் இந்த கருத்தை சொல்வது எனது கடமையாக கருதுகிறேன்
மக்களை சந்தித்து சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட்டால் என் முதலமைச்சரும் அவர்தான் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. இதை அவர் முறையாக எடுத்துச்செல்வது தான் நியாயம் என தெரிவித்தார்.
