நடிகர் மாதவன் படத்தை விட்டு வெளியேறிய இயக்குநர்...
இரட்டையர்களாக நடிகர் மாதவனும், பிரபல இந்தி இயக்குநர் ஆனந்த் மகாதேவனும் இயக்குவதாக இருந்த ‘ராக்கெட் த நம்பி எஃபெக்ட்’ படத்திலிருந்து ஆனந்த் மகாதேவன் வெளியேறினார். தற்போது அந்த மெகா பட்ஜெட் படத்தை மாதவனே தனித்து இயக்குகிறார்.
இரட்டையர்களாக நடிகர் மாதவனும், பிரபல இந்தி இயக்குநர் ஆனந்த் மகாதேவனும் இயக்குவதாக இருந்த ‘ராக்கெட் த நம்பி எஃபெக்ட்’ படத்திலிருந்து ஆனந்த் மகாதேவன் வெளியேறினார். தற்போது அந்த மெகா பட்ஜெட் படத்தை மாதவனே தனித்து இயக்குகிறார்.
ஆனந்த் மகாதேவன் மற்றும் மாதவன் இணைந்து இந்த படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் ஆனந்த் மகாதேவன் இந்த படத்தில் இருந்து வெளியேறுவதாக மாதவன் அறிவித்துள்ளார். இதன்மூலம் மாதவனே தனது முதல் படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 2 வருடங்களுக்கும் மேலாக இப்படத்திற்காக முழுமூச்சாக பாடுபட்டுவரும் மாதவன், உலகத்திற்கு தெரியாத நம்பி நாராயணின் கதையை இந்த படத்தின் மூலம் சொல்லப்போவதாக கூறியுள்ளார்.
நம்பிநாராயணனின் இளம் வயது வாழ்க்கை, இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்தது, சாதனைகள், பொய்வழக்கில் சிக்க வைத்தது, கைது நடவடிக்கை ஆகியவை படத்தில் இடம்பெறுகின்றன. இந்த படத்தில் மாதவன் 3 தோற்றங்களில் வருகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் தயாராகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்புதான் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.
இந்த நிலையில், நம்பி நாராயணன் வேடத்தில் இருக்கும் தனது தோற்றத்தை மாதவன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் இந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருப்பதாகவும் இருவரில் யார் ரீல், யார் ரியல் என்று கண்டுபிடிப்பதற்கு மிகவும் மெனக்கெட வேண்டியிருக்கிறது என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.