லண்டன் நடிகை எமி ஜாக்சனுக்கு கவர்ச்சி காட்டுவது புதிதில்லை. கோலிவுட் திரையுலகில் 'மதராசபட்டினம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஒரு சில படங்களிலேயே முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை பெற்றார். இவருடைய நடிப்பில் இந்த ஆண்டு 2.0 திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போதுமே மிகவும் மாடர்ன்னாக கவர்ச்சி உடையுடன் வலம் வரும் இவர், போட்டோ ஷூட்களில் கூட மிகவும் ஆபாசமாக போஸ் கொடுத்து, அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவார் இதற்கு பலர் தொடந்து விமர்சித்தும் வருகின்றனர். 

இந்த நிலையில் நடிகை எமி ஜாக்சன் பஃடா  2018ம் ஆண்டின் விருது விழாவில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது தான் அணிந்த உடையை வீடியோ எடுத்து அதை அவர் டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

அந்த வீடியோவை பார்த்த சிலர் அவரது உடையை பாராட்டி வந்தாலும் சிலரை முகம் சுழிக்கவும் வைத்துள்ளது.