ரிச்சர்ட் ஆட்டன்பரோவின் ‘காந்தி’, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் ‘இண்டியானா ஜோன்ஸ்’ ஆகிய ஹாலிவுட் படங்கள் உட்பட 400 படங்களுக்கும் மேல் நடித்துள்ள அம்ரிஷ் புரியின் பிறந்த நாளை கவுரவப்படுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் இன்றைய தனது இன்றைய முகப்புப் பக்கத்தில் அவருடைய படத்தை வைத்துள்ளது.

கூகுள் நிறுவனம், புகழ்பெற்றவர்களை கொண்டாடும் விதமாக, அவர்கள் பிறந்த நாட்களில் டூடுள் வைத்து சிறப்பிப்பது வழக்கம். அதன்படி, பிரபல நடிகர் அம்ரிஷ் புரியின்87 வது பிறந்த நாளை முன்னிட்டு, டூடுள் வைத்து சிறப்பித்துள்ளது. 1932 ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி பஞ்சாபில் பிறந்தவர் அம்ரிஷ் புரி.

மறைந்த அம்ரிஷ் புரி, 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தி சினிமாவின் மிகச்சிறந்த வில்லன் நடிகர்களுள் ஒருவரான அவர், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாள படங்களிலும் நடித்துள்ளார். ஸ்பீல்பெர்க்கின்’இண்டியானா ஜோன்ஸ் அண்ட் த டெம்பிள் ஆப் டூம்’ என்ற ஹாலிவுட் படத்திலும் ரிச்சர்ட் ஆட்டன்பரோவின் காந்தி படத்திலும் கூட நடித்துள்ளார். நடித்துள்ளார்.

தமிழில், ரஜினியின் தளபதி, பாபா படங்களில் நடித்துள்ளார். மிஸ்டர் இந்தியா, தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே, ஹீரோ, ரேஷ்மா ஆகிய இந்தி படங்கள் நடிப்புத் திறமைக்கு சான்றாக நினைவு கூறப்படுபவை. வில்லனாக நடிக்கத் தொடங்கிய அம்ரீஷ், பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் தனது முத்திரையைப் பதித்தார்.கடந்த 2005 ஆம் ஆண்டு மறைந்த அம்ரிஷ் புரிக்கு இன்று 87 வது பிறந்த நாள். இதையொட்டி, அவருக்கு சிறப்பு டூடுள் வைத்து சிறப்பித்திருக் கிறது கூகுள்