இயக்குனர் எச். வினோத் இயக்கிய 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில்  நடித்தவர் நடிகை அம்மு அபிராமி. இந்த படத்தை தொடர்ந்து 'ராட்சசன்' படத்தில் ரோஸ் என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்தார். 

இந்த படத்தில் இவருடைய கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது கார்த்தி நடித்து வரும் படத்தில் மீண்டும் கமிட்டாகியுள்ளார். 

இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், ஜோதிகா, சத்யராஜ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் படத்தில் தான் அம்மு அபிராமி நடிக்கிறார்.

இந்த படம் குறித்து சமூக வலைதளத்தில் நடிகை அம்மு அபிராமி கூறியுள்ளது...   ஜோதிகா மற்றும் சத்யராஜ் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளதாகவும், தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு பின் இரண்டாவது முறையாக நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இந்த படத்திற்கு 96 படத்தில் படத்திற்கு இசை அமைத்த கோவிந்த் வசந்த் இசையமைக்கிறார்.  ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார் . இயக்குனர் ஜீத்து ஜோசப் ஏற்கனவே, தமிழில் நடிகர் கமலஹாசன் இயக்கிய பாபநாசம் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.