'உல்லாசம்' பட ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு நடிகர் அமிதாப் பச்சன் விசிட் அடித்தபோது படக்குழுவினருடன் அவர் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது, லெஜெண்ட் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி... அருள் நடித்து வரும் பிரமாண்ட படத்தை இயக்கி வரும் இரட்டை இயக்குனர்கள், ஜேடி - ஜெர்ரி ஆகியோர் இயக்கத்தில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'உல்லாசம்'.

இந்த படத்தை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவருடைய அமிதாப் பச்சன் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் தயாரித்தார். இந்த படத்தில் நடிகர் அஜித் - விக்ரம் ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்தனர். கதாநாயகியாக நடிகை மகேஸ்வரி நடித்திருந்தார். மேலும் ரகுவரன், எஸ்.பி.பாலசுப்ரமணியன் ஆகியோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

கார்த்திக் ராஜா இசையமைத்திருந்த இந்த படத்திற்கு, லெனின் மற்றும் வி.டி.விஜயன் ஆகியோர் படத்தொகுப்பு செய்திருந்தனர். ஜீவா ஒளிப்பதிவு செய்திருந்தார். 

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த போது, படக்குழுவினரை சந்திக்க இந்த படத்தின் தயாரிப்பாளரும், பிரபல பாலிவுட் நடிகருமான அமிதாப் பச்சன் திடீர் என விசிட் அடித்தபோது, இயக்குனர்கள் ஜே.டி - ஜெர்ரி, அஜித், ரகுவரன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரோடும் சேர்ந்து  புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த படம் வெளியாகி தற்போது 23 வருடங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.